Showing posts with label விமர்ச்சனம் விளக்கம். Show all posts
Showing posts with label விமர்ச்சனம் விளக்கம். Show all posts

மத விமர்சனம்

ஓரிறையின் சாந்தியும் சமதானமும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நம் மீது நின்று நிலவட்டுமாக.
தமிழில் கருத்துரையை பதிவு செய்ய வரும் சில மத அபிமானிகள். தான் எழுதும் ஆக்கங்கள் தன்னுடை அகன்ட அறிவை வலைப்பூ வாசகனுக்கு பறைசாற்றுவதாக இருக்க வேண்டும். ஏனெனில் சில மானவர்கள் வலையின் மூலமாகவும் தனது அறிவை மேம்படுத்த விரும்புகின்றனர்.

வலைப்பதிவர்கள் இதை எல்லாம் கருத்தில் கொள்வதாக தெரிய வில்லை. உதாரணம் கூறவேண்டும் என்றால், இஸ்லாம் என்று கூகுலில் தேடிப்பாருங்கள் இஸ்லாத்தை விமர்ச்சிக்க கிளம்பிய சில சகோதரர்கள் இஸ்லாம் ஏற்படுத்திய சமுக மாற்றத்தை சகித்துக் கொள்ளாத முடியமல்.

சத்யவான் ப்ளாக் ஸ்பாட்.இன், வினவு.கம், இறையில்லா இஸ்லாம்ப்ளாக் ஸ்பாட்.இன், செங்கொடி, போன்ற வலைப்பூக்களில். இஸ்லாம் ஏற்படுத்திய எந்த சமுக ஒழுங்கையும் குறிப்பிடமல். இஸ்லாம் கட்டமைத்த வாழ்வியல் திட்டங்களில் தவறு இருப்பதாக கட்டமைக்க பார்க்கின்றனர்.

உண்மையில் இவர்களுடைய பதிவுகளை நாம் பார்க்கும் போது, இவர்களின் சமுக அக்கரை நமக்கு கேள்விக் குறியையே ஏற்படுத்துகிறது. மனிதன் ஒரு விசயத்தை நோக்கி முயற்ச்சிக்கிறான் என்றால். அதில் அவன் சொந்தக் கருத்தும் அவன் சமுகத்தை ஒப்பு நோக்கி, அவன் மனதில் ஏற்படும் கேள்வியுமே ஆக்கங்களாக வெளிவர வேண்டும். அவ்வாறு அவன் பதிவிடும் போதுதான், அவன் ஒரு சுய அதிகாரம் கொண்ட படைப்பாக இருக்க முடியும்.

இவ்வாறே மதங்களைப் பற்றிய பார்வையும் இருக்க வேண்டும். அப்போதுதான் அவன் செத்த பின்னும் சுய அதிகாரம் கொண்ட ஒரு மனிதன் நமக்கு முன்னால் வாழ்ந்து இருக்கிறான் என்று உங்களுக்கு பின் வரும் சமுதாயம் நினைவு கூறும். இல்லை என்றால் சென்ற காலங்களில் இது போன்ற மடையர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். இவர்களுடை காலத்தில் வாழ்ந்தவன் இவர்களால் நிறைய இடர்பாடுகளை சந்தித்து இருப்பார்கள் என்றே உங்களை தூற்றும்.

மாநகர பேருந்தில் தாம்பரத்தில் இருந்து தேணாம்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தேன். பல்லாவரம் பேருந்து நிறுத்தம் அருகில் ரோட்டோரம் நாய் ஒன்று படுத்து இருந்தது. முன் இருக்கையில் அமர்ந்து வந்த எனக்கு நன்றாக தெரிந்தது.

காலை ஐந்து மனி ஆகியிருந்ததால் ரோட்டில் மக்கள் நடமாட்டம் ஒன்றும் இல்லை. பேருந்து ஓட்டுனர் நாய் மீது ஏற்றிக் கொன்று விட்டார். பேருந்தை நிறுத்தக் கூட இல்லை. பின் இருக்கையில் அமர்ந்து இருந்தவர்களிடம் ஓட்டுனர் கேட்டார் செத்து விட்டதா என்று. இதை கண்டு விட்டு அதிர்ச்சி அடைந்து விட்டேன்.

பூனைக்கு யார் மனிகட்டுவது என்ற கேள்வியுடன் பேருந்து பயணிகளை நோக்கினேன். ஒரு பெண்மணி மட்டும் என்னை கண்களால் வரும் நிறுத்தத்தில் என்னை இறங்குமாறு பனித்தார். வரும் நிறுத்ததில் அப் பெண்மணியின் பின்னாலேயே நானும் இறங்கிக் கொண்டேன்.

என்னிடம் அனுமதி வாங்கி ஒரு ஆட்டோவை பிடித்து. நாய் அடிபட்டு செத்து கிடந்த இடத்திற்கு சென்றோம். உடனே நாயை பேருந்தை ஏற்றிக் கொன்ற ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கச் செய்து விட்டே. வீடு திரும்பினோம்.

நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கும் போது. அப்பெண்மணியை பல தடவை சந்திக்கும் வாய்பு ஏற்பட்டது. அதன் மூலம் அவர் என்னிடம் இஸ்லாத்தின் கொள்கைகளை அறிந்து வர ஆரம்பித்தார். குர் ஆன் மொழி பெயர்ப்புகளை படித்து வந்த பெண்மணி ஒரு நாள் போன் செய்து நான் இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டேன் என்றார்.

சகோதரி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதைப் பற்றி.  இஸ்லாமிய நன்பன் யாஸீன் என்பவரிடம் கூறினேன். உடனே அவர் சிந்திக்க எல்லாம் அவகாசம் எடுக்காமல் என்னிடம் கூறினார். இஸ்லாத்தை சொல்லிக் கொடுக்கிறேன்னு சொல்லிட்டு அந்தப் புள்ளைய ஆக்கிடாதே என்றார்.

உற்று நோக்குங்கள் பேருந்தை ஏற்றிக் கொன்று விட்டு நாய்தானே என்று வாதிட்டவனும். இஸ்லாத்தை சொல்லிக் கொடுக்கிறேன்னு சொல்லிட்டு அந்தப் புள்ளைய அம்மாவா ஆக்கிடாதே என்பனும். அவன் கொண்ட கடமையை, சமயத்தை சரியாக புரிந்து கொண்டவர்கள் என்று பதிவர்கள் நினைத்தால், அது பதிவர்கள் செய்யும் தவறு.

இஸ்லாத்தை விமர்ச்சனம் செய்யும் சில பதிவர்கள், இஸ்லாத்தை புரிந்து கொண்டதை விட.  எனக்கு தெரிந்த சில முஸ்லிம்கள் இஸ்லாத்தை குறைவாக அறிந்து வைத்துள்ளார்கள் என்பது எனக்கு தெரியும். இதில் வியப்பான விசயம் என்றால் நீங்கள் இஸ்லாத்தை அறிந்து ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறீர்கள். அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு அறியாமல் இருக்கிறார்கள்.

இஸ்லாத்தை விமர்சனம் செய்யும் சில பதிவர்கள். குர் ஆன் வசனங்களுக்கு பல் வேறு இஸ்லாமிய அறிஞர்களின் மொழிப் பெயர்ப்புகளை.  மேற்கோள் காட்டுவது என் போன்ற பின்னூட்டவாதிகளை வியப்பில் ஆழ்த்துகிறது.

 ஒரு உண்மையான முஸ்லிம் என்பவன் அனைத்து விமர்ச்சனத்தையும் உள்வாங்க தெரிந்தவன். என்பதை நீங்கள் அறிய வேண்டும். இஸ்லாமிய மார்க்கம் என்பது யாருடை சொத்தும் அல்ல. இந்த மார்கத்தை தூதர்கள் வழியாக படைத்தவனே மனித சமுதாயத்திற்கு வழங்கி உள்ளான். அதையே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் உண்மை படுத்தினார்கள்.

எனக்கு தெரிந்தவரை மிகச் சிறந்த இறை அடியார்களை  எல்லாம். "பைபில்" இழிவு செய்துள்ளதை போல் வேறு எந்த மத நூலும் இழிவு செய்ய வில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் மனித உடம்பில் ஒரு சதை கட்டி ஒன்று உள்ளது அது சீர் கெட்டு விட்டால் உடல் முழுதும் சீர் கெட்டு விடும், அது சீர் அடைந்து விட்டால் உடல் முழுதும் சீர் அடைந்து விடும். அதுதான் இதயம்.







மேலும் வாசிக்க...

கற்றுக் கொள் மனிதா


ஓரிறையின் சாந்தியும் சமதானமும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நம் மீது நின்று நிலவட்டுமாக.


குமுதம் பத்திரிக்கையில் சத்குரு ஜாக்கி வாசுதேவ் அவர்கள் சொர்க்கம் உண்டா. என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் போது. சொர்க்கம் என்பது பிறர் மீது அன்பு செலுத்தி வாழ்வதே சொர்க்கம் என்று பதில் அளித்தார்கள். ஒரு சமயத்தை கட்டமைக்கும் ஒரு கொள்கைவாதியின் பதில் இவ்வாறு இருக்கிறது என்றால்.


அதை விட ஒருபடி மேலே போய் ஒரு சினிமா கவிஞன் எழுதுகிறான். விண் சொர்க்கமே பொய் பொய் என் ”சொர்க்கம்” நீயே பெண்ணே என்று! சமயவாதிகளின் பதில் கவிஞனின் கூற்றைப் போலவே அமைந்து விடுவதால்.

ஓர் இறைக் கொள்கை. மண்ணறை வாழ்வு. மறுமை விசாரணை!. சொர்க்க வாழ்வு. நரக வாழ்வு?. என்பது எல்லாம் வெறும் கட்டுக் கதை என்று பரிணாம தத்துவவாதிகளால் கடுமையாக விமர்சமனம் செய்யப் படுகிறது. மறுப்பு வாதம் கொண்டவர்கள் மறுப்போடு மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை.

அவர்களே ஒரு கட்டுக்கதையை நம்மிடம் வெகுகாலமாக பதிவு செய்ய முற்படுகின்றனர். மனிதர் இருகால் உயர் விலங்கினத்தைச் சேர்ந்த, ஹொமினிடீ குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இனமாகும். மரபணுச் சான்றுகளின்படி தற்கால மனிதன் சுமார் 200,000 ஆண்டுகளுக்கு முன், ஆப்பிரிக்காவில் தோன்றியதாகக் கருதப்படுகின்றது.

மனிதர்களுக்கு மிகவும் வளர்ச்சியடைந்த மூளை உண்டு. இது, பண்பியல் பகுப்பாய்வு (abstract reasoning), மொழி, உண்முக ஆய்வு, பிரச்சைனைகளைத் தீர்த்தல், உணர்வுகள் போன்றவற்றைக் கையாளக்கூடிய வல்லமை கொண்டது. இத்தகைய வல்லமை கொண்ட மூளையும், நிமிர்ந்த உடலும் மனித வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.

நிமிர்ந்த உடலினால் முன்னுறுப்புக்கள் (கைகள்) இரண்டும், வேறு வேலைகளைச் செய்வதற்குக் கிடைத்தன. இதனால் மனிதர்கள், கருவிகளை வேறெந்த உயிரினத்தைக் காட்டிலும் சிறப்பாகப் பயன்படுத்தக் கூடியதாக அமைந்தது. மனிதர்கள் உலகம் முழுதும் பரந்து உள்ளனர். அன்டார்க்டிக்கா தவிர்ந்த ஏனைய எல்லாக் கண்டங்களிலும் மனிதர் பெருந் தொகையாக வாழ்கின்றனர்.

ஜூலை 2008 நிலைப்படி, 6.7 பில்லியனுக்கு மேற்பட்டதொகையில் மனிதர்கள் உலகில் வாழ்கின்றனர். மனிதரில், ஹோமோ சப்பியென்ஸ் சப்பியென்ஸ் என்னும் ஒரு துணையினம் மட்டுமே உள்ளது. பெரும்பாலான உயர்நிலை உயிரினங்களைப் போலவே, மனிதனும் ஒரு சமூக விலங்கு. மனிதர் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும், தங்களை ஒழுங்கமைத்துக் கொள்ளல் என்பவற்றுக்காகவும் தொடர்பு முறைகளைப் பயன்படுத்துகின்றனர்.

மனிதர்கள் பல சிக்கலான சமூக அமைப்புக்களை உருவாக்கியுள்ளனர். இவற்றுள் குடும்பங்கள் தொடக்கம் நாடுகள் வரையான அமைப்புக்கள் அடங்குகின்றன. மனிதர்களிடையேயான சமூகத் தொடர்புகள், பெருமளவுக்கு வேறுபடுகின்ற, மரபுகள், சடங்குகள், நெறிமுறைகள், விழுமியங்கள், சமூக நெறிகள், சட்டங்கள் போன்றவற்றை உருவாக்கியுள்ளன.
.

பரிணாமவாதிகளின் கண்ணித் திரையை திருக் குர் ஆன் மறுக்கிறது. மனிதன் பரிணாம வளர்ச்சிப் பெற்றவன் அல்ல மனிதன். உங்களைப் படைத்திருப்பதிலும். ஏனெய உயிரிணத்தை பரவச் செய்திருப்பதிலும் உறுதியாக நம்பும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன. குர் ஆன் 45:4.

அவனே உங்களைக் களிமண்ணால் படைத்தான் பின்னர் அவனே மரணத்திற்கான காலக் கெடுவை நிர்ணயித்தான். குர் ஆன் 6:2, மேலும் வாசிக்க 3:59, 7:`12, 15:26, 17:61, 23:12, 32:7, 38:71, 49:13, 55:14,

குர் ஆனின் கூற்றை கொண்டு மனிதனின் பார்வையை மட்டும் நாம் சிந்திப்போம். ஒரு மனிதன் ஒரு பொருளைப் பார்த்தால் அதன் நிறத்தை மனிதனுடைய கண்களில் லென்ஸ் இருப்பதால். அந்த லென்ஸ்ஸில் பட்ட பிம்பங்கள் வண்ணங்களாக பிரதி பளிக்கின்றது. அதுவே நமக்கு கலர் காட்சிகளாக விரிகிறது. 

ஆனால் ஒரு குரங்கோ அல்லது எனெய எந்த உயிர் இணமோ அதன் கண்களில் லென்ஸ் இல்லாத காரணத்தல் அதன் கண்களின் காட்சிகள் எல்லாம் கருப்பு வெள்ளையாகவே காட்சி தருகிறது. படைப்பினங்களின் கண்களில் இருந்தே மனிதன் ஒரு தனிப் படைபினம் என்று அறியலாம்.

இங்கு ஒரு விசயத்தை ஒப்பு நோக்குங்கள், ஒரு மனிதனிடம் பத்து ரூபாய் நோட்டையும் ஆயிரம் ரூபாய் நோட்டையும் கொடுங்கள். அவனுக்கு அதற்கான வித்தியாசம் தெரியும். அதே நோட்டுக்களை ஒரு கழுதையிடம் கொடுங்கள் அதை உடனே தின்று தீர்த்து விடும்.

இங்கு உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம் சில சர்கஸ் கூடரங்களில் உள்ள சில மிருகங்கள் அதனுடைய ரிங் மாஸ்டர். ஒரு அட்டையில் 40 என்று எழுதியிருக்கும் ஒரு பலகையை முதலில் எடுத்து அந்த பிரானியின் முன் வைப்பார் பின்னர் 8 என்று எழுதியிருக்கும் ஒரு பலகையை எடுத்து அதன் முன் வைப்பார் பின்னர் அந்தப் பிரானியை நோக்கி கட்டளை இடுவார். உடனே அது அடுக்கி வைக்கப் பட்டு இருக்கும் பலகைகளில் 48 என்று எழுதியிருக்கும் ஒரு பலகையை எடுத்துக் கொண்டு வரும். உடனே கூடியிருந்த மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்வார்கள்.

ஆனால் இங்கு ஒப்பு நோக்க வேண்டிய விசயம் என்னவென்றால், முதலில் 8 என்று எழுதியிருக்கும் ஒரு பலகையையும் பின்னர் 40 என்று எழுதியிருக்கும் ஒரு பலகையையும் அந்தப் பிரானியின் முன் வைத்தால். நிச்சயமாக 48 என்று எழுதியிருக்கும் ஒரு பலகையை தூக்கிக் கொண்டு வராது.

ஆனால் ஒரு மனிதன் எந்த என்களை எவ்வாறு மாற்றினாலும் அவன் கண்டுபிடித்து விடுவான். படிக்காதவன் கூட என்களையும் பணங்களையும் என்னுவதை அறியலாம் எனெனில் மனிதனுக்கு அவனைப் படைத்தவன் அவனுக்கு. (அனைத்துப் பெயர்களையும் (அல்லாஹ்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். குர் ஆன். 2:31.)

நாத்தீகவாதிகளே அல்லாஹ் என்ற ஒருவன் நிச்சம மனிதனுக்கு கற்றுக் கொடுக்க வில்லை என்று நீங்கள் மறுத்தால் பின்னூட்டம் இடுங்கள் பதில் அளிக்கிறேன். 






மேலும் வாசிக்க...

கொசு இணம்

ஓரிறையின் சாந்தியும் சமதானமும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நம் மீது நின்று நிலவட்டுமாக

எனது கூட படித்த தோழியின் கணவர் விஷ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவரை பார்க்க மருத்துவமனை போய் இருந்தேன். தோழி கேட்டார் ஏண்டா இந்த கொசுவை ஒழிக்கவே முடியாதா?. 

மனிதர்களுக்கு ரொம்ப சுய நலம் அதிகம், அது மட்டும் இல்லை யாரோ பாவம் செய்ய, யாரோ ஒருவன் தண்டனை பெறுவது போல்தான். இப்போது மனிதர்கள் கொசுவை எதிரியாக நினைத்து கொசுவின் இணத்தையே அழித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றேன்.  

கொசுவின் ஆற்றலை நாம் மதிப்பிட முடியாவிட்டாலும்.  ஒரு பறக்கும் பூச்சி  இணம் என்று மட்டுமே அறிந்து வந்த நமக்கு. கொசுவின் முதுகில் இன்னொரு உயிர் இணம் வாழ்கிறது. என்பது யாருக்காவது தெரியுமா!. 

கொசுவே தேவை இல்லை எனும் போது கொசுவின் மேல் இன்னொரு ஜீவனா!. ஏன் மச்சி கொசுக்கு மேல் ஒரு உயிர் குடியிருக்கனும், அதுக்கு வேற இடமே கிடைக்க வில்லையா!. என்று விஷ காய்ச்சலில் படுத்துக் கொண்டே என்னை வெறுப்பு ஏத்தினான். தோழியின் கல்லானாலும் கணவன்.


கொசுவை பற்றி குர் ஆனில் ஒரு முன்னறிவிப்பு உள்ளது. அது என்ன வசனம் தெரியுமா?  إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي أَن يَضْرِبَ مَثَلاً مَّا بَعُوضَةً فَمَا فَوْقَهَا நிச்சயமாக அல்லாஹ், கொசுவையோ அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான் (அல்பகரா :2:26)

இந்த இறை வசனம் எப்போது அருளப்பட்டது தெரியுமா?.  இணை வைப்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக அல்லாஹ் 22:73- வது வசனத்தில் ஈயையும், 29:41-வது வசனத்தில் சிலந்தியையும் உவமையாகக் கூறுகிறான்.

இதைக் கேட்ட இணைவைப்பாளர்கள்  ஈயும், சிலந்தியும் அல்லாஹ்வின் வேதத்தில் கூறப்படுகின்றனவா? என்று இளக்காரமாகக் கேட்டனர்.அப்போது தான் அல்லாஹ் இவ்வசனங்களை அருளி இப்படிக் கூறினான். நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான். அல்பகரா :2:26

அதாவது சத்தியம் என வந்து விட்டால், அது எவ்வளவு அற்பமானதாக இருந்தாலும்,பெரிதாக இருந்தாலும் அதைக் கூறுவதற்கு அல்லாஹ் தயங்கமாட்டான். எனக்கூறி விட்டு அறிவியலுக்கு ஒரு சவாலாக. கண்ணுக்குப் புலப்படாத ஓர் அற்பமான ஒரு பூச்சியையும் அதன் மேல் படைத்துள்ளான். 

அது அதன் குழவிக் குஞ்சாகவோ அல்லது கொசுவை  தூய்மைப் படுத்தும் ஒரு அரிய படைப்பாகவோ இருக்கலாம். அதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

ஒரு கொசு உடல் கூறுகள்: ஒரு பெண் பால் கொசு  அதற்கு அதன் தலையில் நூறு கண்கள் அதன் வாயில் 48 பற்கள். . அதன் உடலில் மாறுபட்ட மூன்று இதயங்கள்.  அதன் தும்பிக்கை நுனியில் ஆறு அறைகள்.  அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அலுவல்கள்,  ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று இறக்கைகள்.

எக்ஸ்ரே கருவி போன்ற நுண்ணிய தர்மோமீட்டர் பொருத்தப்பட்ட சிவப்பு நிறத்தில் ஒரு நுண்ணிய கருவி அதனுள் படைக்கப்பட்டுள்ளது. அதன் வேலை அது மனித உடலில் இருளில் வந்து அமர்ந்து இரத்தத்தை உறிஞ்சும் போது யாரும் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு மனிதனுடைய  நிறத்திற்கேற்றவாறு தன் நிறத்தை  மாற்றிக் கொள்கிறது.


மனித மூளையே  வியக்குமளவுக்கு அதனிடமுள்ள கூரிய ஊசி முள்ளால் குத்தி சிறிஞ்சியைப் போல். இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கிறது. ஊசி எப்படீ பாய்ந்து உள்ளே செல்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியாது.  மனிதனின் இரத்த வாசனையை அறுபது கி.மீட்டர் தொலைவிற்கு  அப்பாலிருந்து  நுகர்ந்து  தெரிந்து  கொள்ளும்.

இந்த அற்புத ஆற்றலை கொசுவிற்கு அதனைப் படைத்தவன் அதற்கு கொடுத்து இருக்கிறான். இவை எல்லாவற்றிற்கும் மேலாக அதன் முதுகின் மேல். கண்களால் பார்க்க முடீயாத அளவுக்கு மிகச்சிறிய ஒரு ”பூச்சி” உள்ளது என  இன்றைய  அறிவியல் கண்டு பிடித்துள்ளது.

கொசுவின் முதுகில் அப்படி என்னதான் அந்த பூச்சி செய்து கொண்டு இருக்கிறது.  அது ஒரு கிருமி முதுகு எலும்பு உயிரினங்கள் மீது ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்த அதற்கு எதவது ஒரு உயிரிணத்தின் துணை தேவை படுகிறது. 

அவ்வாறு கொசுவின் மேல் உட்காற்ந்து கொசு நமது உடலில் வந்து கடிக்கும் போது அதன் வழியாக கிருமி உடலில் நுழைந்து சிகப்பு அணுக்களில் ஊடுருவும். அப்படி ஊடுவிய கிருமி சிகப்பு அனுக்களில் தஞ்சம் அடையும். அங்கு இணப் பெருக்கத்தை உண்டு பண்ணிய பிறகு மீண்டும் வந்து இரத்தத்தில் கலக்கும் இரத்தத்தில் கலந்த கிருமி கல்லீரலை தாக்கும்.

கேமிட்டோசைடுகள் கொசுக்களுள் கேமீட்டுகள் எனும் இனப்பெருக்கச் செல்களாகின்றன. இவை ஒருங்கிணைந்து சைகோட் (Zygote) என்னும் கருமுட்டை உருவாகின்றது. இவை நகரும் தன்மையுடையதால், நகரும் கருமுட்டை (ookinetes) எனப்படுகின்றன. 

இரைப் பையின் சுவரைத் துளைத்துக் வெளிவரும் கருமுட்டை, தொடருந்து பிளந்து பல நுண்ணிய கதிர்வடிவ ஸ்போரோயிட்டுகளாக உருமாறு மாறி, கொசுவின் உமிழ் நீர் மூலம் மீண்டும் முது கெலும்பியின் இரத்ததில் கலக்கின்றன. கிருமிகளின் தாக்கத்திற்கு ஒப்ப, அது மலேரியாவாகவோ டெங்க்காவோ பிலேக்காவோ உருவெடுக்கும்.



மீரோசோயிட்டுகள் சிவப்பணுக்களிலிருந்து வெளியேறும் பொழுது இரத்ததில் கலக்கும் நச்சுப் பொருட்களே, மலேரியா காய்ச்சலுக்குக் காரணமாகும்.

கொசுவின் மேல் உள்ள ஒரு உயிரி
பிளாஸ்மோடியம் புரோட்டோசோவா தொகுதியைச் சேர்ந்த பேரினம் ஆகும். இந்த இனத்தைச் சார்ந்த ஒட்டுண்ணிகள் மலேரியா நோய்க்குக் காரணமானவை. இவை மனிதர்களைத்தவிர, பறவைகள், ஊர்வன மற்றும் எலிகளையும் பாதிக்கின்றன.

இவ்வுயிரி ஓர் அகச்செல் இரத்த ஒட்டுண்ணியாகும். இதன் வாழ்க்கைச் சுழற்ச்சிக்கென ஓர் முதுகெலும்பியும், இரத்தம் உறிஞ்சும் கொசுக்களும் தேவைப்படுகின்றன.  1898ஆம் ஆண்டு ரொனால்ட் ராஸ் என்பவர் Culex கொசுக்களில் பிளாஸ்மோடியம் உள்ளதை நிரூபித்தார். இதற்காக அவருக்கு 1902ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. Giovanni Battista Grassi என்ற இத்தாலிய பேராசிரியர் அனபிலஸ் கொசுக்கள் மட்டுமே மனிதர்களிடையே மலேரியா நோயைப் பரப்பவல்லது என கண்டறிந்தார்.

பெண் அனபிலஸ் கொசுக்கள் முதுகெலும்பிகளைக் கடிக்கும் பொழுது, அதன் உமிழ் நீர் வழியாக ஆயிரக்கணக்கான கதிர்வடிவ ஸ்போரோசோயிட்டுக்கள் இரத்ததில் கலக்கின்றன. பின்பு, கல்லீரலின் உட்புறமுள்ள ரெட்டிகுலோ எண்டோதீலியல் (reticuloendothelial) செல்களில் தங்குகின்றன. இங்கு அமைதியாக தங்கியிருக்கும் ஸ்போரோசோயிட்டுக்கள் ஹிப்னோசோயிட் என அழைக்கப்படுகிறது.

கல்லீரலில் இவை கிரிப்டோசோயிட்டுகளாக உருமாறி, பாலில்லா இனப்பெருக்கமுறையால், ஆயிரக்கணக்கான நுண்ணிய மீரோசோயிட்டுகளாக இரத்தத்தில் கலந்து, சிவப்பணுக்களைத் தாக்குகின்றன.

சிவப்பணுக்களுள், இவை டிரோபோசோயிட்டுகளாக வளர்கின்றன. இதன் மையத்தில் தோன்றும் நுண்குமிழி, உட்கருவை ஓரத்திற்கு தள்ளி, மோதிர அமைப்பைப் பெறுகிறது. இதன் பின் சைசாண்டு நிலையில், சைசாண்டுகள் பலவாகப் பிளந்து பல்லாயிரக்கணக்கான மீரோசோயிட்டுகளாக மாறி சிவப்பணுக்களிலிருந்து வெளியேறி இரத்ததில் கலக்கின்றன. பல மீரோசோயிட்டுகள் இந்த சுழற்சியில் மேலும் பெருக்கின்றன. பல சுழற்சிக்குப்பின் சில மீரோசோயிட்டுகள் கேமிட்டோசைட்டுகளாக (gametocyte) உருப்பெறுகின்றன. இந்த கேமிட்டோசைட்டுகள் கொசுக்களால் உறிஞ்சப்படுகின்றன. 

பிளாஸ்மோடியத்தின் வாழ்க்கை வட்டத்தில், மனிதர்கள் இடைநிலை விருந்தோம்பிகளாகவும், கொசுக்கள் நிலையான விருந்தோம்பிகளாகவும் செயல்படுகின்றன. கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கேட்டு கொண்டு இருந்த தோழியிடம் இப்ப சொல்லு கொசுவையும், உன் புருஷனையும் ஒழிச்சாத்தான், பிளாஸ்மோடியம் ஒழியும் பிளாஸ்மோடியம் பரவாமல் தடுக்க, அரசுகள்தான் சாக்கடைகளையும் தண்ணீர்களை தேங்க விடாமல் பராமரிக்க வேண்டும்.

மேலும் வாசிக்க...

நாளின் துவக்கம்

ஓரிறையின் சாந்தியும் சமதானமும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நம் மீது நின்று நிலவட்டுமாக

கடந்த சில வருடங்களுக்கு முன் ஒட்டு மொத்த உலக மக்களும் ஒரே நாளில் நோண்புப் பொருநாள் கொண்டாடினார்கள். மிகுந்த மன மகிள்ச்சி ஏற்பட்டது எனக்கு.  உலகம் முழுதும் இந்த வருடம் ஒரே  நாளில் பெருநாள் கொண்டாடி விட்டார்கள்.  இனி வரும் காலம் இதுவே உலகம் முழுவதும் தொடரும் என்று நம்பினேன்.
ஆனால் அடுத்த இரண்டு மாதம் கழித்து வந்த ஹஜ்ஜிப் பெருநாளை இரண்டு தினங்கள் தமிழகத்தில் கொண்டாடினார்கள் அது எப்படி இரண்டு மாதத்திலேயே இரண்டு நாள் வித்தியாசப் படும் என்று எனக்கு தெரிந்த நன்பர்கள் சிலரிடம் கேட்டேன்.
நன்பர்கள் சிலறோடு நான் மார்க்கம் சம்பந்தமாக பல விசயங்களை பேசுவது உண்டு அப்படி பேசிக் கொண்டிருக்கும் போது, ஹிஜ்ரா கமிட்டி என்று ஒன்று செயல் பட்டு வருவதை அறிந்து கொண்டேன். அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்னும் ஆவளோடு அவர்கள் சொல்லும் விசயங்களை அவர்களின் வீடியோ பதிவுகளின் மூலம் அறிந்து கொண்டேன்.

அவைகளை பற்றி நன்பர்களோடு பகிர்ந்து கொண்டேன் நன்பர்கள் என்னை விட்டு தூராமாகிப் போகிறார்கள்!. அப்படி என்னதான் சொல்கிறது ஹிஜ்ரா கமிட்டி என்று பார்ப்போம் உலகம் முழுவதும் ஓரே குர் ஆன். உலகம் முழுமைக்கும் ஓரே நபி என்னும் போது ஏன் ஒரே நாளில் பெருநாள் மட்டும் கொண்டாடக் கூடது என்று அவர்கள் கேட்கிறார்கள்.

அவர் இந்தக் கேள்வியோடு அவர்கள் உள்ளடக்கும் விசயங்கள் நிறைய அதை நம் வலைப்பூ வாசகர்களே பகிர்ந்து கொண்டால் என்ன என்பதே இந்தக் கட்டுரை, ஒரு விசயத்தை இங்கு ஒப்பு நோக்க வேண்டும் நாம் வாசிக்கும் சில தமிழ் மொழி பெயர்ப்பு குர் ஆனில். அரபி மொழியில் அல்லாஹ் அருளிய குர் ஆனை சுத்தமாக வார்த்தைக்கு வார்த்தை தமிழில் மொழி பெயர்க்க வில்லை.

உதரணத்திற்க்கு குர் ஆனில் “ரப்” என்று வரும் வார்த்தைக்கு அரபியில் என்ன அர்த்தம் என்றே தமிழில் மொழியாக்கம் செய்கிறார்கள் என்று நான் கருதுகிறேன். இல்லை என்றால் ஒட்டு மொத்தமாக தமிழில் வந்த குர் ஆனின் மொழி பெயர்ப்புகள் எல்லாம் ஒன்றுதான் என்று கூறலாமே. இங்கு யாரும் அவ்வாறு கூறுவதை விரும்ப வில்லை.

இதில் இருந்து அறியலாம் மொழி பெயர்ப்பாளர் எந்தக் கொள்கையை சார்ந்து இருக்கிறாறோ, அந்த அந்த ஜமா அத்களின் கொள்கையின் அடிப்படையில் மொழி பெயர்ப்பும் விளக்கமும் அமைந்திருப்பதை அறியலாம்.
ஹிஜ்ரா கமிட்டி கட்டமைக்கும் உள்ளடக்க விசயங்களில் முதன்மையானது. நாளின் துவக்கம். நாளின் துவக்கம் எது என்பது பற்றி அவர்கள் எடுத்து வைக்கும் ஆதரங்களில் முதன்மையானது ஒரு நாளின் கடைசி தொழுகையாக வித்ர் தொழுகை அமைந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறார்கள். வித்ர் தொழுகையுடன் ஒரு நாளினுடைய அனைத்து தொழுகையும் முடிந்து விடுகிறது. பின்பு பஜ்ர் தொடங்கி விடுகிறது அதை தொடர்ந்து சுபுஹை நாம் அடைகிறோம் அதனால் பஜ்ரில் இருந்தே நாளின் தொடக்கம் ஆரம்பம் என்பது முதல் வாதம்.
ஐந்து வேளைத் தொழுகையில் நடுத் தொழுகையாக அஸர் இருப்பதால், அஸருக்கு முந்தி பஜ்ர் மற்றும் லுஹர். அஸருக்கு பின்னர்  ம்ஃக்ரிப் மற்றும் இஷா. ஆக இஷாவுக்கு பின் நாளின் கடைசி தொழுகையாக வித்ர் பின்பு பஜ்ர் நாளின் துவக்கம் பஜ்ரில் இருந்து ஆரம்பிக்கிறது.

 அவர்கள் இதற்க்குள் கட்டமைக்கும் விசயங்கள் அனைத்தயும் பதிவின் உள்ளடக்க முடியாது. ஹிஜ்ரா கமிட்டி கட்டமைக்கும் இன்னொரு விசயம். ஒரே நாளில் உலகம் முழுதும் ஐந்து வேளைத் தொழுகையை தொழுகிறோம், அதே போன்று ஒரே நாளில் ஜும்மா தொழுகையையும் தொழுகிறோம். நம்மால் ஏன் ஒரே நாளில் பிறையை மட்டும் கணக்கிட முடியாது என்பதே.


உலகம் முழுமைக்கும் ஒரே குர் ஆன் அகில உலகத்திற்க்கும் ஒரே ஒரு தூதர், உலகம் அனைத்திற்க்கும் ஒரே நாளில் ஐவேளைத் தொழுகை அதை போன்றே ஜும்மா என்று கடைப்பிடிக்கும் போது ஏன் பெருநாள் மட்டும் கொண்டாட முடிய வில்லை. இதற்க்கு மறுப்பு தெரிவிப்பவர்கள் “பிறையை பார்த்து நோன்பு வையுங்கள் பிறையை பார்த்து நோன்பை விடுங்கள் என்பதே.
   


திருக்குர் ஆன்  போர் நிறுத்தம் செய்யச் சொல்லி நான்கு மதங்களை அல்லாஹ் கூறுகிறான். பார்க்க குர் ஆன் 9:5  இவ்வாறு போர் நிறுத்தம் செய்து இருக்கும். இரண்டு நாட்டில் ஒரு நாடு ஒரு நாள் முன்பும் அதோடு சண்டையிடும் மற்றொரு நாடு ஒரு நாள் பின்பும் பிறையை பார்க்கின்றன ஒரு நாள் முன்பே பிறையை பார்த்த நாடு பிறையை பார்க்காத நாட்டுடன் போர் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.


திட்டமிட்டு போர் செய்தால் மட்டுமே பெரிய இழப்புகளை தவிர்க்க முடியும். நாளின் ஒவ்வொரு கணத்தையும் இரண்டு நாடும் மிகத்துள்ளியமாக அறிய வேண்டும் இல்லை பாதகமான முடிவை இரண்டில் ஒரு நாடு சந்தித்து விடும்.


சூரியனும் சந்திரனும் கணக்கின் படியே இயங்குகின்றன. குர் ஆன் 55:5 இதன் அடிப்படையில் சிந்தித்தோம் என்றால். நமது முடிவுகள் சரியாகி விடும் ஒப்பு நோக்க தமிழக முஸ்லிம் அறிஞர்கள் பலர் பல அமர்வுகளை பிறை விசயம் பற்றிப் பேசியாகி விட்டது.  ஒன்று சரியான முடிவை நோக்கி பயணம் ஆக முடிய வில்லை, சரியான முடிவு காணமுடியாத விசயத்தை நம் மீது இஸ்லாம் கட்டமைத்திருக்காது.
எங்கே பிறை விசயத்தில் தவறு இருக்கும் என்றால் புரிந்து கொள்வதில் இருக்கலாம். ஒரு முடிவு குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் எடுக்கப் பட்டால் நிச்சயம் முடிவு எட்டப்பட்டே இருக்கும். முடிவு எடுக்கப் படமல் பல வருடங்களாக இழுத்துக் கொண்டே செல்கிறது என்றால் நிச்சயம் அறிஞர்கள் இடையே கருத்து மோதல்களும் புரிந்து கொள்வதில் தவறும் இருக்கலாம்.
 


வியப்புக்கு உரிய விசயம் ஒன்றும் காத்திருக்கிறது உலகில் உள்ள குவாலிஜீன் மற்றும் டாங்கா என்ற இரு நாடுகளும். நாற்பத்து ஐந்து நிமிட இடைவெளி கொண்ட நாடுகள், சரியாக சொல்ல வேண்டும் என்றால், டாங்காவில் 2016 ஜனவரி மஃரிப் தொழுகை 7.00 மனிக்கு, அதே நேரம் குவாலிஜீன் நாட்டில் 6.15 மனிக்கு மஃரிப் தொழுகை நாள் டிசம்பர் 31.12.2015. யாரவது விளக்கம் சொல்லுங்க...
மேலும் வாசிக்க...